கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் கட்சித் தலைவர்களான மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக எடப்பாடி அணியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியின் இணைத்தனர். மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் புதிதாக தங்களது அணியில் இணைந்த நபர்களுக்கு கட்சி துண்டு போட்டு வரவேற்றார்.