கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரகம்பட்டி, காணியாளப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வரவணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு தற்போது காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை இறக்கை மற்றும் அடாப்டர்களை பெரிய பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு காற்றாலை அடாப்டர் எடுத்து வந்த டாரஸ் லாரி கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாயனூர் முடக்கு சாலை பகுதியில் திரும்பும் போது நடுவழியில் லாரி
தரையில் இடித்து சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த சிக்கிக்கொண்ட லாரி அப்புறப்படுத்தவில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மாயனூர் அருகே மணவாசி சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காற்றாலை அமைக்கும் பணியாளர்களை தீவிரமாக வாகனத்தை அப்புறப்படுத்த கோரியும், சாலையில் செல்லும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். மேலும், இதே போல் கிராமப் பகுதிகளில் பகல் இரவு என எந்த நேரத்திலும் பெரிய பெரிய டாரஸ் லாரிகள் காற்றாலை ரெக்கை அடாப்டர் எடுத்துச் செல்வதால் விபத்து ஏற்பட்டு கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் உயிரிழப்பு ஏற்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.