கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது க.பரமத்தி அருகே உள்ள கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து, கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் ராம்குமார் மற்றும் சிறுவன் தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த மோகனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த ராம்குமார் மற்றும் சிறுவன் தருண் ஆகியோரின் உடல் க.பரமத்தி காவல் நிலைய போலீசாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிரே வந்த தனியார் பேருந்தில் பயணித்த ஓட்டுனர் உட்பட 5 பேர் சிறு படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலியான ராம்குமார் ஓபிஎஸ் அணி கரூர் மாநகர செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.