Skip to content

கரூர்… ஸ்கேட்டிங்கில் 5வயது சிறுவன் புதிய உலக சாதனை….

கரூரில் சிறுவன், சிறுமி ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர் – ஒரு மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து UK Book of world record சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூரில் தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கும் ஹர்ஷிவ் மித்ரன் (வயது 5) என்ற சிறுவன் பின்பக்கமாக 1 மணி நேரத்தில் 35 சுற்றுகளில் 7 கி.மீ தூரம் ஸ்கேட்டிங்

செய்தார். அதே போல், அன்விதா பானு (வயது 4) என்ற சிறுமி 1 மணி நேரத்தில் 83 சுற்றுகள் 16 கி.மீ ஸ்கேட்டிங் செய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார். இச்சாதனையாளர்களுக்கு கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினார். இச்சாதனை international UK Book of world record சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!