கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ் (20), வீரியபட்டி சரவணகுமார் (19), சிந்தாமணிப்பட்டி சரவணகுமார் (17,) தெற்கு வீரியப்பட்டி நித்திஷ் (16 )ஆகியோர் ஒன்று சேர்ந்த பெரிய வீச்சரிவாள் கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
இதை வீடியோ எடுத்து தங்களது பேஸ்புக், இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.