தமிழக அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள எ.வ.வேலுவின் உதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனம், திமுக முன்னாள் எம்எல்ஏ வாசுகியின் சகோதரி பத்மா வீடு, தோட்டக்குறிச்சி முன்னாள்பேரூராட்சித் தலைவர் சக்திவேல் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஒய்வுக்கு பின்னர் இன்று காலை துவங்கி மீண்டும் சோதனையை துவக்கியுள்ளனர்…3 நாட்களாக மத்திய பாதுகாப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.. அதேபோல் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீடு, அவர்களது மகன் ராமுக்குச் சொந்தமான உணவு மற்றும் கட்டுமான நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ளகட்டுமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.