தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு ஒரு குழு 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் நெரூரில் மருத்துவர்கள் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் காய்ச்சல் முகாமில் கலந்து
கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த மருத்துவக் குழுவினர் இந்த இடங்களை தொடர்ந்து இதே ஊராட்சிக்கு உட்பட்ட 2 இடங்களில் அடுத்து முகாம் நடத்த உள்ளனர்.