கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கலவை ஏற்றி சென்ற லாரியானது அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற
போது, அதிவேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியானது முன்னே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பின்னர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை பொக்லின் இயந்திரம் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தில் நடந்த விபத்து காரணமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.