கடந்த 3-ம் தேதி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் இரண்டு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் அவரது வீடு என இரண்டு இடங்களில் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில் சுரேஷ் அலுவலகத்தில் உள்ள ஒரு சில கோப்புகள் மற்றும் கணினியில் உள்ள கோப்புகள் கைப்பற்றப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதிய துணை ராணுவ படை வீரர்களும் திரும்பி சென்றனர்.