கரூரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை மாவட்டத்தில் உள்ள 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5,706 பேர், மாணவிகள் 5,781 பேர் என மொத்தம் 11,487 பேர் எழுதுகின்றனர்.
தனி தேர்வர்கள் 1,103 ,7 மையங்களில் எழுதுகின்றனர். தேர்வு பணியில் அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள்,
பறக்கும் படையினர் என மொத்தம் 820 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள. தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு எழுதும் மையத்திற்கு பள்ளி மாணவ,மாணவிகள் காலையில் வருகை தந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்விற்கு படித்தனர்.
பின்னர் தேர்வு நேரம் வந்தவுடன் தேர்வு அறைக்கு அனைவரும் ஆர்வத்துடன் சென்றனர்.