கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகிலா பானு (51) கணவர் சேட்டு (55). இவர் 1989ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவில்லை.
கடந்த 12 ஆண்டுகளாக சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் தான் அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால், கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்து பாடங்களுக்கு தேர்வு எழுதி இருந்தார். இதில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் துணைத்தேர்வில் மீதம் உள்ள மூன்று பாடங்களுக்கு தேர்வு எழுதி உள்ளார்.
இன்று நடைபெற்ற அறிவியல் பாடத்திற்கு அவர் தேர்வு எழுதினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பல்வேறு முயற்சிகளை எடுத்து, தனது மகன் சாகுல் அமீது (24) தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தேர்வு நுழைவுச்சீட்டு விண்ணப்பித்து கொடுத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.