திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புசாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அருவாவைத் தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில்…ராட்சத அருவா பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. தனித்தனி இரும்பு தகடுகள் வாங்கியும் ஒரே தகடு கொண்டும் அருவா தயாரிக்கப்படுகிறது. மற்ற அருவாக்களைக் காட்டிலும் நேர்த்திக்கடன்
அருவா தயாரிப்பதில் வேலைப்பளு அதிகம்.