தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது…. தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்கிற அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கிறார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படுகிறது செறிவூட்டப்பட்ட அரிசி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சிறுதானிய ஆண்டாக 2023 மத்திய அரசாங்கம் இந்தியா முழுமையிலும் அறிவித்திருக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
திடீரென பொங்கல் கரும்பு நான் வாங்கமாட்டேன் என்று நிறுத்தி விட்டு சென்ற ஆண்டு வ்ஸ் இந்த ஆண்டு ஒரு வருட காலம் பயிரை வளர்த்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பது நியாயமில்லை. இதனால் அடிமட்டு விலைக்கு கூட கரும்பை விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசை நம்பி சாகுபடி செய்து இருக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் மனமுவந்து இந்த விவசாய நலன் கருதி கரும்பை பொங்கல் பரிசாக வழங்குவதற்கு முன் வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க முன்வர வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒத்த கருத்துடைய பாரம்பரிய வேளாண் விஞ்ஞானி ஆலோசகர்கள் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக அரசுக்கு எதிராக துவக்குவோம் என எச்சரிக்கிறேன். விவசாயிகளே முடக்கி விவசாயிகள் உன்னை ஒற்றுமையை சீர்குலைத்து அதற்கென்றே கரும்பை கொள்முதல் செய்ய மாட்டேன் என்று மக்களையும் விவசாயிகளின் பிளவுபடுத்த உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது எனவே இனி அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தியுள்ளார்.