திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய பாடம் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது. ஏற்கனவே கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் இடம் பெற்ற பாடல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் கருணாநிதியின் தமிழ்த்தொண்டு 9ம் வகுப்பு பாடத்தில் செம்மொழியான தமிழ் என்ற தலைப்பில் இடம்பெறுகிறது.
