முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தூய்மை பணியாளர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று
நடைபெற்றது. நாகூர் நகர மன்ற உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500,க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு திமுக நகராட்சி தலைவர் மாரிமுத்து, அரிசி புடவை வேட்டி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை பயனாளிகள் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டு நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.