முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இன்று திமுக அமைதி பேரணி நடத்தியது. .அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. பேரணியில் துரைமுருகன், கே.என். நேரு, உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டிஆர்பாலு, ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் பல்லாயிரகணக்கில் கலந்து கொண்டனர்.
அவர்கள் காலை 8.45 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை அடைந்தனர். அங்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைதி பேரணியையொட்டி மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.