Skip to content
Home » கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாளையொட்டி   கடந்த 3-ம் தேதி  மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்க இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம், மற்றும் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் சார்பில் இந்த ரயில் விபத்தையொட்டி ஒரு நாள் துக்கமும் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட  பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி(புதன்)  மாலை 6 மணிக்கு அதே புளியந்தோப்பு பகுதியில் கொண்டாடப்படும் என  தலைமைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!