புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாகத்திற்காக 75 மரங்கள் வெட்டப்பட உள்ளது .அதை ஈடு செய்யும் வகையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 750 மரக்கன்றுகள் நடும் விழா சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது .அமைச்சர் ரகுபதி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்
இதன் பின்னர்ய அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று காலை செந்தில்பாலாஜி சிறைத்துறை கட்டுபாட்டில் இல்லை,நேற்று இரவு முதல் தான் அவர் சிறைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார்,சிறை துறையின் நடைமுறைப்படி ஒரு நாளில் மூன்று மனுதாரர்கள் செந்தில் பாலாஜியை சந்திக்கலாம்
,குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் அவரை சந்திக்கலாம், முறைப்படி சிறைத் துறையின் அனுமதி பெற்ற பின்னர் தான் யாராக இருந்தாலும் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் சிறைத்துறை விதி. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல், 17 மணி நேரத்திற்கு மேல் அவரை துன்புறுத்தி உள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை,
இதுதான் அவருக்கு நெஞ்சுவலி வந்ததற்கான காரணம் . எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதால் தான் சிபிஐ இனிமேல் தமிழக அரசின் அனுமதி பெற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
திமுகவை அச்சுறுத்துவதற்காத்தான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கொடுமைப்படுத்தி உள்ளது. ஆனால் திமுக எதற்கும் அஞ்சாது என்று பாஜகவிற்கு தெரியாது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்வது, அவர் புத்திக்கு ஏற்றவாறு அவர் விமர்சனம் செய்வதை காட்டுகிறது,
சட்டம் அனைவருக்கும் சமம் தான் நீதிமன்ற உத்தரவுப்படி டி ஆர் பாலு தொடந்த வழக்கில் அண்ணாமலையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ, அதன் படி தான் திமுக எப்போதும் நடக்கும் . அதிமுகவை பணிய வைப்பதற்காக திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரகுபதி அது உங்களுடைய யூகம் என்று தெரிவித்தார்.