Skip to content
Home » கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

  • by Senthil

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை  மானியக்கோரிக்கை விவாதம் இன்று சட்டமன்றத்தில்  நடக்கிறது. அதைத்தொடர்ந்து  துறை அமைச்சர் சேகர்பாபு மானியக்கோரிக்கை மீது பதில் அளித்து உரையாற்றுகிறார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை  மானியக்கோரிக்கையை யொட்டி இன்று மெரினா கடற்கரையில் உள்ள  கலைஞர் கருணாநிதி நினைவிடம்   இந்து கோயில் கோபுரம் போன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை கடற்கரைக்கு வந்தவர்கள், கருணாநிதி நினைவிடம் இன்று வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து  ரசித்து பார்த்தனர்.  இந்த அலங்காரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக  அமைச்சர் சேகர்பாபு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.  சுற்றுலா, பண்பாடு  மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் ஆகியோரும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!