Skip to content

கருணாநிதி பிறந்தநாள்: மாணவர்களுக்கு பேச்சு போட்டி,

தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்   பிறந்த நாளானஜூன்  மாதம்  3ம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும்”.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025ம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி தொடர்பான விவரம் பின்வருமாறு: –

11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்டப்போட்டி:

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இப்போட்டிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 08.05.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.

இப்போட்டிகளில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

சென்னை மாவட்டத்தில் போட்டி நடைபெறும் நாள். 09.05.2025, நேரம் மு.ப.9.00 மணி, இடம்- சி.கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

இதுபோல மற்ற மாவட்டங்களிலும்  போட்டிகள் நடைபெறும்.  கல்லூரி மாணவர்களுக்கும் தனியாக போட்டிகள் நடைபெறும்.

 

 

error: Content is protected !!