Skip to content

கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள்,நிறுவனங்களில் ,விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் தேசிய நெடுஞ்சாலையான குட்டை கடை- ஈரோடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பாக  மைல்

கல்லுக்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்து, வாழைமரம் கட்டி, தேங்காய், பழத்துடன் பூஜை செய்தனர். தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை தாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை கொண்டாடினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!