Skip to content
Home » சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் கார்த்திக் முனுசாமி(45). இவர் கோவிலுக்கு வந்த  ஒரு தனியார் டிவி தொகுப்பாளினியிடம்  நெருங்கி  பழகினார்.

பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. சம்பவத்தன்று  தனியாக வந்த அந்த பெண்ணை தனது வீட்டுக்கு காரில் அழைத்து சென்றார்.  அங்கு தீர்த்தம் என  கூறி   மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்தார். அதைக்குடித்ததும் தொகுப்பாளினிக்கு  மயக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தொகுப்பாளினியை  பலாத்காரம் செய்தார்.  அதை அவர் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததுடன்,  விபசார தொழிலில்  தள்ளவும் சதி திட்டம் போட்டுள்ளார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி கர்ப்பம் தரித்தார். உன்னை திருமணம் செய்துகொள்கி்றேன். இப்போது குழந்தை வேண்டாம், கருவை கலைத்துவிடு என கூறி உள்ளார். இதை நம்பி அவரும் கருவை கலைத்து விட்டார். ஆனால் திருமணம் மட்டும் செய்யாமல் இழுத்தடித்தார். இதுபற்றி தொகுப்பாளினி கேட்டபோது வீடியோவை வெளி்யிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அவர் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து அவரை அர்ச்சகர் பணியில் இருந்து  சஸ்பெண்ட் செய்தனர்.

இந்த நி்லையில் தொகுப்பாளினி  விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார்  6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!