தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் துவாக்குடி யில் உள்ள புதுப்பிக்கும் பிரிவில்( பேருந்தின் உதிரி பாகம் புதுப்பிக்கும் பிரிவினை)வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி எம். பிரியங்கா ,
கர்நாடக ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி டாக்டர். கே. நந்தினி தேவி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தனர்.
பேருந்து புதுப்பிக்கும் பிரிவில் என்னென்ன உதிரி பாகங்கள் செய்யப்படுகின்றன ,என்னென்ன புதுப்பிக்கப்படுகின்றன என ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து புதுப்பிக்கும் பிரிவு மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.
ஆய்வின்போது கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் . இரா .பொன்முடி , பொது மேலாளர்கள் சிங்காரவேல், ஆ. முத்து கிருஷ்ணன், . முகமது நாசர், மற்றும் கர்நாடகபோக்குவரத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.