Skip to content
Home » கர்நாடகா தேர்தல் முடிவு….. காங்கிரஸ் முந்துகிறது…. தனி மெஜாரிட்டி கிடைக்குமா?

கர்நாடகா தேர்தல் முடிவு….. காங்கிரஸ் முந்துகிறது…. தனி மெஜாரிட்டி கிடைக்குமா?

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி  ஒரே கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை  தொடங்கியது.

ஆரம்பம் முதல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. முதல்சுற்று ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி காங்கிரஸ் 109 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.  பாஜக 83 தொகுதிகளிலும், மஜத 18 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.   தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னணியில் இருந்தாலும்,  பகல் 12 மணி அளவில் தான் தெளிவான ஒரு நிலை  தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் முன்னணி தலைவர்களான சித்தராமையா,  டிகே சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். பாஜகவில் இருந்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர் பின்தங்கினார்,அதே நேரத்தில் பாஜக முன்னாள் முதல்வர்   பசவராஜ் பொம்மையும் முன்னணியில் உள்ளார். மஜத தலைவர்  குமாரசாமி சென்னப்பட்னா தொகுதியில் பின்தங்கி உள்ளார். காங்கிரஸ் 113 இடங்கள் பிடித்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்குமா என்பது இன்னும் 2 மணி நேரத்தில் தெரியவரும். அதே நேரத்தில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டிக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *