கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சுமார் 2,000 கிலோ தக்காளியை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் வந்த காரில் மோதிய கும்பல் லாரியின் டிரைவரை மிரட்டி கூகுள் பே மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்திருக்கின்றனர். மேலும் டிரைவரை இறக்கி விட்ட அந்த கும்பல் தக்காளி லாரியையும் தமிழகத்திற்கு கடத்தி சென்றனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த டிரைவர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்எம்சி யார்டு போலீசார் நடத்திய விசாரணையில் லாரியை கடத்திய மர்மநபர்கள் அந்த லாரியை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு கொண்டு சென்று 2 ஆயிரம் கிலோ தக்காளியையும் விற்று தீர்த்திருக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கோலார் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோரை கைது செய்தனர்..