கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள ‛மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்ட நிபுணர்களின் ஆலோசனை கேட்டு உள்ளார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு, சித்தராமையா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.