224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக அங்கு தேர்தல் நடக்கிறது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார். அத்துடன் கர்நாடகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாகவும் அவர் அறிவித்தார்.
கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி.