Skip to content

காதல் திருமணம்…. வாலிபர் ஆணவ கொலை… பெண்ணின் தந்தை கைது….

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி (34). இவரும், கிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பட்டீல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ, புஜபலியை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு புஜபலியும், அவரது உறவினரான சுமேத் என்பவர் டூவீலரில் வீட்டிற்கு சென்றார். அப்போது காரில் வந்த தம்மனகவுடா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து டூவீலரை வழிமறித்து  புஜபலியையும், சுமேத்தையும் 4 பேரும் தாக்கினர். அப்போது சுமேத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். புஜபலியை சூழ்ந்து கொண்ட 4 பேரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கத்தியால் புஜபலியை 4 பேரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த புஜபலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உறவினர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!