தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வழங்க வேண்டிய 86 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வலியுறுத்தியும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் பேரணியாக வந்த விவசாயிகள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோரின் உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர். மேலும் தமிழகத்திற்கு
வழங்க வேண்டிய நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு கர்நாடக தரவேண்டிய நீரை உடனே திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து போதிய நீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.மேலும் வருகின்ற 21 ஆம் தேதி விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு கேரணி நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.