Skip to content

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து தமிழர்களை தாக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு முடிவுக்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணிசெந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கர்நாடக அரசை கண்டித்து உரையாற்றினார். கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் செயல்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப், மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் கி.காசிராமன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், மண்டல செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக மகாத்மாகாந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்துக்கும், காமராஜரின் நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *