கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இதையடுத்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்தராமையா முதல்வராக பதவி ஏற்றார். டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்தார். மேலும் இவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்கள் அனைவருக்கும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரா ராஜா ஆகியோருக்கும் காங்கிரஸ் சார்பில் கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி பிடிகொடுக்காமல் தொடர்ந்து நழுவி வருகிறார். மேலும் பதவியேற்பு விழாவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார்.