மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக
தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.கேடட் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் கட்டாக்,குமித்தே உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கோவையிலிருந்து மாணவ,மாணவிகள் சுமார் இருபது பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக
விளையாடிய வீரர் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கம் என வென்று அசத்தினர்.இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதில் பேசிய அவர்,கராத்தே பயிற்சியாளர் தியாகு கராத்தே கலை சர்வதேச அளவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதாகவும்,விரைவில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகள் வர உள்ள நிலையில் போட்டிகளுக்கு மாணவ,மாணவிகள் தங்களை தயார் படுத்தி கொள்வது அவசியம் என அவர் தெரிவித்தார்..