கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் கராத்தே மாணவர்களின் தனித்திறன்களை பாராட்டி தகுதிப்பட்டை விருது வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு கராத்தே தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த 125 மாணவர்கள் அடுத்த நிலைக்கான வண்ண பட்டை(பெல்ட்) விருது, தகுதி நிலை நிறைவுச் சான்றிதழ் பெற்றனர்.
மேலும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று தங்களது கராத்தே திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே பயிற்சிகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ‘கியோகுஷின்’ அகில இந்திய தலைவர் ‘சிகான்’ ராமதாஸ் ஆகியோரையும் பரணிக் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.