பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது. 351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு துணைத் தேர்வு எழுதிய சிறுவனை பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர் .அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் கரூர் நகர காவல் நிலையத்தில் அந்த சிறுவனை ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு துணைத் தேர்வு எழுதிய நபர் சிறுவன் என்பதால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. அவனது பெற்றோரை அழைத்து வந்தும் சிறுவனுக்கு புத்திமதி கூறினர்.