4 மாத கைக்குழந்தையை ஈவுஇரக்கமின்றி தாய் கொன்றுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது. தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனது 4 மாத கை குழந்தையை ஈவு இரக்கமின்றி அப்பெண் கொன்றுள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர்களை மண் வெட்டியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில்
படுகாயமடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். படுங்காயங்களுடன் உறவினர்களுக்கு தீவிர சிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. தனக்குத்தானே கழுத்தையும் அறுத்துக்கொண்டுள்ளார் அப்பெண். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பம் குடும்பத்தையே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.