மதுரை அடுத்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கப்பலூர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத நுழைவு கட்டணம் வசூல் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக போராட்டத்தில் குதித்தது. முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான உதயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் உள்பட ஏராளமானோர் இன்று சுங்க சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் அதிமுகவினர் அங்கிருந்து நகராமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் அதிமுகவினரை கைது செய்து அவர்களை அப்புறப்படுத்தி்னர். உதயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.