அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக குற்றம்சாட்டி, அவரை விடுவிக்கக் வேண்டுமென அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர்.எனவே மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
என மூன்று கேள்விகளை முன்வைத்து, விசாரணையை ஜூலை 11 மற்றும் 12 ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று தொடங்கியது. செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கவில்சிபல், காணொளியில் வாதாடினார்.
சட்டவிரோத பணமரிமாற்ற தடை சட்டத்தை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருந்ததாகேவா, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.
காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கைது செய்ய முடியாது. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கைதுக்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி செய்யப்படவில்லை.நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பே சரியானது.
இவ்வாறு கபில்சிபல் வாதாடினார். அதைத்தொடர்ந்து மேகலா தரப்பில் வக்கீல் என்.ஆர். இளங்கோ தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆரம்பம் முதலே அமலாக்கத்துறை தனது வரம்பை மீறி உள்ளது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க உத்தரவிட்டது சட்ட விரோதம். சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் ஆரம்பம் முதல் காவல்துறை போல நடந்து கொண்டது.
இவ்வாறு அவர் தன் வாதத்தை முன் வைத்தார்.
நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நிலையில் ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நல்ல தீர்ப்பை எழுதுவது தான் நீதிபதியின் கடமை என்று விசாரணையின்போது நீதிபதி கார்த்திகேயன் கூறினார்.