Skip to content

கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி. இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவுடன் புகார் மனு அளித்தார்.

17 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்துவரும் அஞ்சமாளிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அஞ்சம்மாளின் கணவர் சம்பந்தமூர்த்தியிடம் கொடுத்து தனது மகன் வினோத்தை சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பியுள்ளார். சொன்ன வேலை கிடைக்காததால் 15 நாளில் மீண்டும் சொந்த ஊர் வந்துள்ளார், அதனால் கட்டிய தொகை 1.35 லட்சத்தை திருப்பிக் கொடு என்று லட்சுமி கேட்டதற்கு தருவதாக கூறியுள்ளார். இதற்கிடையே அஞ்சம்மாள் தான் கடனாக கொடுத்த 20 ஆயிரம் ரூபாயை வட்டியுன் சேர்த்து கொடு என்று வற்புறத்திவந்ததால் இரண்டு தரப்பாரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

அஞ்சம்மாள் குடும்பத்தினர் கந்துவட்டித்தொழில் செய்துவருவதால் 20 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் 1.90 லட்ச ரூபாய் திருப்பிகொடு என்று அஞ்சம்மாள் ஆட்களை வைத்து லட்சுமியை மிரட்டியும் அவரது கணவர் கலியபெருமாள் அவரதுமகன் வினோத் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதாரத்துடன் அளித்து நடவடிக்கை வேண்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!