’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் தனது தலைவர்170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடந்தது. அடுத்தக் கட்டமாக நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. 47 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதிக்கு படப்பிடிப்பிற்கு வந்ததாக நடிகர் ரஜினிகாந்த் அங்கு மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. கேரளா, நெல்லை பகுதிகளில் நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பில் இருந்து குஜராத்தில் நடைபெறும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது. இதை நேரில் காண நடிகர் ரஜினி சென்றுள்ளார்.இந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, ‘கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.