Skip to content

புற்றுநோயில் இருந்து மீண்ட கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்….

ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். சமீப காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை பெற கடந்த மாதம் அமெரிக்க சென்றார். அங்கு மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். இவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்தவுடன் அமெரிக்காவில் இருந்தே உருக்கமாக வீடியோ வெளியிட்டார்.

shivrajkumar

shivrajkumar

இதையடுத்து கடந்த சில தினங். களுக்கு முன்பு இந்தியா திரும்பினார். தாயகம் திரும்பிய அவரை கர்நாடக முதல்வர் சித்தாரமையா பெங்களூருவில் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “அறுவை சிகிச்சைக்கு மறுநாள், நான் அவரை அழைத்து விசாரித்தேன், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் எனக்குத் தெரிவித்தார். இப்போது நேரில் வந்து உடல்நிலை குறித்து விசாரித்தேன்” என்றார்.  மேலும் அடுத்த மாதம் முதல் சிவ ராஜ்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிவராஜ்குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!