Skip to content
Home » கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

சென்னை பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒருவரல் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை அடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து விசாணையில் அவர் திருவனந்தப்புரத்தை சேர்ந்த தனிஷ் (29) என்பதும் கல்ட் பிட் ஜிம்மில் யோகா ஆசியராக இருப்பதும், தன்னிடம் உடலை குறைக்க வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *