திருச்சியில் கடந்த 25.11.22-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பாலக்கரையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் என்பவர்களை கைது செய்தனர். மேலும் மணிகண்டன் மீது வழிப்பறி செய்ததாக 2 வழக்குகளும் வாலிபர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகளும் உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் கொழுப்பு பாரதி @ பாரதிதாசன் மீது கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தாக 3 வழக்குகளும், பெண்கள் அணிந்திருந்த தங்கசெயினை பறித்து சென்றதாக 3 வழக்குகளும், இருசக்கர வாகனத்தை திருடியதாக 2 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்தததாக 1 வழக்கு உட்பட 12 வழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மணிகண்டன் மற்றும் கொழுப்பு பாரதி @ பாரதிதாசன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால் குண்டாசின் கீழ் கைது செய்ய திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள 2 பேர் மீதும் குண்டாசின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.