திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன் காலனி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (28) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். மேலும் அவரிடம் இருந்த 5000 ரூபாய் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ஐயப்பனை சிறையில் அடைத்தனர்.
