கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்,இந்நிலையில் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அடிப்படையில் வால்பாறை டிஎஸ்பி முரளி உத்தரவின் பேரில்,ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் இதன் அடிப்படையில் கோவை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கஞ்சா வாங்கும் நபர்கள் குறித்து தெரிவித்ததின் பேரில் அம்பராம்பாளையம் பேருந்து நிலையத்தில் வாகன சோதனை செய்த பொழுது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்னக்கொடி என்பதும் அவரது மனைவி லட்சுமி இவர்கள் வந்த வாகனத்தை சோதனை நடத்தினர். இதில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது,கணவன் மனைவி இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் கோவை சேர்ந்த சிறுவன் மற்றும் தேனி மாவட்டச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது, கணவன் மனைவி உட்பட மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் நான்கு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.