மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னூர்
பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னூர் பேட்டை மீனவர் கிராமத்தில் 2 பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொட்டலங்களை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த இரு பொட்டலங்களிலும் தலா ஒரு கிலோ வீதம் இரண்டு கிலோ கஞ்சா போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் அவை எங்கிருந்து வந்தது யாரேனும் கடத்தி வந்தார்களா அல்லது படகில் எடுத்துச் சென்றது கீழே விழுந்து கரை ஒதுங்கியதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.