அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள்
உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும், இதற்கு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இலவச தொலைபேசி எண் 10581 பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் போதைப் பொருட்களால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு
செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். உடன் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா, தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.