Skip to content

காலில் கட்டி கஞ்சா கடத்தல்…தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் கைது….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு கார், பஸ், பைக் மூலம் வரும் பக்தர்கள் அலிப்பிரியில் உள்ள சோதனை சாவடியில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முழுமையான சோதனைக்கு பிறகு திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை புனித ஸ்தலமாக உள்ளதால் இங்கு இறைச்சி, மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. தடையை மீறி ஒரு சில ஊழியர்கள் மது, சிகரெட், கஞ்சா உள்ளியிட்டவைகளை நூதன முறையில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் நேற்று மாலை வைகுந்தம், கியூ காம்ப்ளக்ஸ் பொருட்கள் வைக்கும் அறை அருகே கஞ்சா பொட்டலம் ஒன்று காணப்பட்டது. இதனைக்கண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த திருப்பதியை சேர்ந்த கங்காதரம் என்ற தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடித்து பிளாஸ்டிக் கவரில் காலில் கயிற்றால் கட்டி மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 100 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கங்காதரத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!