கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முழுவதும் கஞ்சா குட்கா வேட்டையில் களமிறங்கியிருந்தனர். இதில் குட்கா வைத்திருப்பதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பீடா வியாபாரியிடம் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர் அதில் குட்காவுக்கு பதிலாக கஞ்சா சாக்லேட்டுகள் போலீசாருக்கு சோதனையில் கிடைத்துள்ளது.
இதனை எடுத்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் பிரஜபதியை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு போலீசார் அவரிடம் இருந்து ஒன்னே முக்கால் கிலோ கஞ்சா சாக்லேடுகளை பறிமுதல் செய்து அசோக் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குட்கா வேட்டையின் போது கஞ்சா சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.