தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று மக்களவையில் பேசியதாவது:
நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் இந்த மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதையும் பாஜக தனது அரசியல் இலாபக் கணக்கை கருத்தில் கொண்டுருப்பது எதிர்பாராதது.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது, பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதையடுத்து “இந்தியில் பேசினால் எனக்கு புரியாது” பாஜக வினரின் ரகளை மற்றும் பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பெரியார் சொன்ன மேற்கோளை குறிப்பிட்டார். மகளிருக்கு வாக்களிக்கும் உரிமையை முதலில் வழங்கிய நீதிக்கட்சியும், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டியின் சாதனைகளையும் குறிப்பிட்டார்.
1929ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் பெண்களுக்கான கல்வி உரிமை, சொத்துரிமை, இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் இயற்றியதை குறிப்பிட்டார்.
1996 ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக ஆதரித்தது. 2010ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே மசோதா குறித்து இன்று பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 13 ஆண்டுகளாக நாம் இன்னும் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம். மகளிர் இடஒதுக்கீ்டடை பாஜக வின் 2014ம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தாலும், கலைஞர், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதினார்.
இந்த மசோதாவை நிறைவேற்றக்கோரி திமுக மகளிர் அணி டெல்லியில் மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தியது. ஆனால், பாஜக அரசு மிகவும் மெத்தனமாக இருந்தது. இன்று வரை மற்றக் கட்சியினரிடம் கருத்துக்கேட்டகாமல் திடீரென இன்று பாஜக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டு வந்துள்ளது.
மகளிரை அதிகாரப்படுத்துதல் குறித்த பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார், இந்த மசோதா என்றும் சட்டமாகும் மற்றும் நடைமுறைக்கு வரும் என்று எந்தவிதமான தேதியும் குறிப்பிடப்படவில்லை.
மக்கள் தொகைக்கணக்கெடுப்பு, மற்றும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்பது மிகவும் தவறு. மேலும், இந்த இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடும் பாதிக்கப்படக்காடது,
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பால் தென்இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக குறையும்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
இது இடஒதுக்கீடு அல்ல, பெண்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அநீதிகளை நீக்குவதாகும். இன்னும் எத்தனை காலங்களுக்கு மகளிர் இடஒதுக்கீட்டை பெற நாங்கள் காத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
எப்போது பெண் ஒருவர் ஆணுக்கு இணையாக அதிகாரம் சக்தி பெறும் போது, அவர் தீய சக்தியாக மாறுவார் என்று சிலர் குறிப்பிடுவதாக தெரிவித்தார். மேலும் காளி தெய்வம் சக்தியாகவும் அதிகாரமாகவும் மேலும் நல்ல சக்தியாக இருப்பதாகவும் நீங்கள் கருதுவது உண்டா என கேள்வி எழுப்பினார்
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
பெண்கள் போரில் பங்கேற்றுள்ளனர். இந்திரா காந்தி போன்ற வலுவான பெண்களை இந்த நாடு பெற்றுள்ளது. ஜெயலலிதா வலுவான தலைவர் என்பதை நான் குறிப்பிடுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மாயாவதி, சோனியா காந்தி, மமதா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ் பாேன்றோர் வலுவான பெண் தலைவர்கள் என்று குறிப்பிட்டார்
எங்களுக்கு எந்தவிதமான வணக்கம், சலுகைகள் தேவையில்லை, எங்களுக்கு தேவையானது சமத்துவம். இணையாக நடத்தப்படுதல் என்று குறிப்பிட்டார்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி”. மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள்கட்டி மற்றும் “பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை..” அனைத்து தரப்பினரும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய மசோதாவில் பாஜக அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது என்று கனிமொழி எம்.பி பேசினார்.