நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் கடந்த 1ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்து வருகிறார்கள். 7ம் தேதி மாலை வரை மனு அளிக்கலாம். அதன்படி தூத்துக்குடி தொகுதி எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று காலை கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ரைாதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சண்முகய்யா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக வந்திருந்தனர். விருப்பமனு அளித்த கனிமொழி முன்னதாக மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.